வணக்கம்
உலக தமிழர்களுக்கு ஓர் இனிமையான மகிழ்ச்சித் தகவல் .
நமது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 04-04-2019 அன்று இந்திய அரசு சார்பில்
வழக்குரைஞர் திரு . கதிர்வேலு அவர்கள், நீதியரசர்கள் திரு.கிருபாகரன் ,
திரு.சுந்தர் - முன்னிலையில் தெரிவித்த தகவல்.
நமது திருநெல்வேலி அருகில் உள்ள ஆதிச்ச நல்லூர் (தற்போது தூத்துக்குடி
மாவட்டம்) அகழ்வாராய்ச்சி வல்லுநர்களால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு
பொருட்கள் அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாண ஆராய்ச்சி கூடத்திற்கு
கார்பன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட முடிவுகள் வந்துவிட்டது என்றார்.
***அதில் ஒரு பொருள் கி.மு 905 ஆண்டு மற்றும் இன்னொன்று கி.மு.791 ம்
ஆண்டு தமிழர்கள் பயன்படுத்தியது என தெரிவித்துள்ளார்கள் .***
நமது தமிழ் மொழி கலாச்சாரம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை
அமெரிக்க ஆராய்ச்சி கூடம் இந்த உலகத்திற்கு தெரிவித்துள்ளது.
*** அதே போல் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த தமிழ் பிராமி
எழுத்துக்கள் கி.மு.395 ம் ஆண்டு வழக்கத்தில் இருந்தது என்றும் இந்திய
அரசின் வழக்குரைஞர் உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தார்.***
மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் நமது தமிழ் மொழி உலகத்தில் பழமையான
வளம் நிறைந்த சிறந்த மொழி என இந்த கணினி யுகத்தில் ஆதாரத்துடன்
நிரூபிக்கப்பட்டுள்ளது .***
மேற்கண்ட தகவல் உலகத்தமிழர்களுக்கு தெரிவிக்க பாடுபட்ட தூத்துக்குடி
மாவட்ட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி திரு.காமராஜ் மற்றும்
அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் ,ஊழியர்கள் ,ஆட்சியாளர்கள் ,தமிழ் அறிஞர்கள்
ஆகியோர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக பாராட்டுகளும் வாழ்த்துக்களையும்
தெரிவித்து மகிழ்வோம்.
*********************************************************************************
தகவல் -தினத்தந்தி -தமிழ் நாளிதழ் 05-04-2019 திருநெல்வேலி
